சில காரணங்களுக்காக உங்களுடைய வலைதளத்தை முழுவதுமாக வேறு ஒரு டொமைன் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றால் அது ஒரு சுலபமான காரியமல்ல. அப்படி மாற்றும் பொழுது சில நேரங்களில் சரியாக website backup எடுக்கப்படாமல் சில தகவல்கள் மாற்றப்படலாம் அல்லது விடுபட்டுவிடலாம் .
இதனால் நமக்கு நிறைய கால விரயம் ஏற்படலாம். சில நேரங்களில் உங்களால் அந்த தகவல்களை திரும்ப பெற முடியாமல் கூட போக வாய்ப்புள்ளது. இதை தவிர்ப்பதற்காகவே நிறைய நேரங்களில் நாம் பணம் செலுத்தி backup சேவையை நாம் பெறுகிறோம். இது போன்ற ஒரு சேவையை நாம் எவ்வாறு இலவசமாக பெறுவது என்பதை பற்றி இன்று அறிந்து கொள்ள இருக்கிறோம்.
Step 1: Login into WordPress Dashboard
முதலில் நாம் உங்களுடைய வலைத்தளத்தின் wordpress dashboard க்கு login மூலமாக நுழையவேண்டும். அவ்வாறு நுழைய www.domainname.com/wp-admin என்ற லிங்கை கிளிக் செய்து அதில் உங்களுடைய லாகின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் செலுத்தவும். அது உங்களை உங்கள் வலைதளத்தின் டேஷ்போர்டு க்கு அழைத்துச்செல்லும்.
Step 2: Install wpvivid website backup plugin
இப்பொழுது நாம் wpvivid backup pluginனை install செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
முதலில் Dashboard ல் உள்ள plugin என்ற பட்டனை அழுத்தவும். அதில் new plugin னை கிளிக் செய்து,அதில் wpvivid backup என்று டைப் செய்யவும். தேடலின் முடிவில் வரும் plugin னை இன்ஸ்டால் செய்து அதனை ஆக்டிவேட் செய்யவும். இது ஒரு இலவச plugin ஆகும்.
Step 3: How to create a backup of a website
இரண்டு விதங்களில் நாம backup எடுக்கலாம். ஒன்று Manual backup, மற்றொன்று schedule backup.
Manual backup:
Manual backup பில் பார்த்தா இரண்டு என்னஆப்ஷன் இருக்கு. ஒன்று save backup to local, மற்றொன்று remote backup. உங்க மொத்த வெப்சைட் டையும் நீங்க ட்ரான்ஸ்ஃபர் பண்ற மாதிரி இருந்தா, Database+ Files( Entire Website) என்பதை தேர்ந்தெடுத்து, backup Now பட்டனை அழுத்தவும்.
உங்க மொத்த வெப்சைட்டும் பேக்கப் எடுக்கப்படும். பின்பு அதனை கீழே உள்ள லிங்க்இல் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Remote backup பில் நீங்கள் FTP,google drive, one drive, drop box போன்றவற்றில் நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
Step 4: How to Restore backup
டவுன்லோட் செய்யப்பட்ட பேக்கப் பைலை அப்லோட் செய்ய, எந்த domain இல் அப்லோட் செய்ய வேண்டுமா, அந்த domain இல் wpvivid backup plugin ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
எங்கு நீங்கள் இந்த backup டவுன்லோட் செய்தீர்களோ அதன் அருகே அப்லோடு என்ற ஆப்சன் இருக்கும். அதில் டவுன்லோட் செய்யப்பட்ட File லை drag செய்யவும். சிறிது நேரங்களில் உங்களுடைய பைல் அப்லோட் ஆகிவிடும். பின்பு அதன் அருகில் உள்ள Restore என்ற பட்டனை அழுத்தவும். சிறிது நேரங்களில் உங்கள் வெப்சைட் ரெடியாகிவிடும்.
புதிய வெப்சைட்டை பார்க்க நீங்கள் மீண்டும் லாகின் செய்து உள்ளே நுழைய வேண்டும். இப்பொழுது உங்களுடைய புதிய வலைதளம் ரெடியாகி இருக்கும். மிக சுலபமான வழியில் நீங்கள் உங்கள் ஒரு domainஇல் இருந்து மற்றொரு domain க்கு உங்கள் வலைத்தளத்தை மாற்றிக்கொள்ளலாம்.
Step 5: How to schedule your backup
இதில் நாம் எவ்வாறு ஒவ்வொரு மாதமும் ஆட்டோமேட்டிக்காக backup பை schedule செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் உங்கள் plugin என்ற டேபை கிளிக் செய்யவும்.
இதில் உங்களால் உங்கள் வலைதளத்தை 12 hour ஒரு முறையோ, வாரத்திற்கு ஒரு முறையோ மாதத்திற்கு ஒரு முறையோ உங்களால் ஆட்டோமேட்டிக்காக backup எடுத்துக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் enable backup schedule என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
அதேபோல் இந்த backup எதில் ஸ்டோர் செய்ய வேண்டும் என்பதையும் இதனுடன் செலக்ட் செய்ய வேண்டும். உங்களுடைய லோக்கல் server லும் செய்யும் செய்து கொள்ளலாம். அல்லது ரிமோட் server ஆன google drive, one drive, drop box ஆகியவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
எப்பொழுது உங்களுக்கு பேக்கப் தேவையோ அப்பொழுது இந்த சர்வரில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
very good and useful sir.