Master Digital Marketing

SEO என்றால் என்ன? ஏன்அதற்கு கவனம் செலுத்த வேண்டும்!

SEO (தேடு பொறி மேம்படுத்தப்படுதல்) என்பது websiteகளை  கூகுள், பிங் மற்றும் யாகூ போன்ற Search Engineகளில்  காண்பிப்பதற்கான செயல்முறை ஆகும்.

SEO வோட  வேலை என்னவென்றால் நீங்கள் googleலில் தேடும் பொது உங்கள் website முதலில் வரவழைப்பதும், அதனால் உங்கள் வெப்சைட்டின்  trafficஐ  அதிகரிப்பதும்.

என் இதை செய்ய வேண்டும் ?

google ல மட்டும் ஒரு நாளைக்கு 35 கோடி தேடல்கள் நடைபெறுகிறது.

 இந்த  தேடல்கள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களால் பின்வரும்  காரணங்களுக்காக தேடப்படுகிறது.

  • குறிப்பிட்ட விஷயத்தை கற்க
  • பிரச்சனைகளை தீர்க்க
  • ஒரு விஷயத்தை செய்ய
  • ஒரு பொருளை வாங்க

இந்த  தேடல்கள் keyword ஐ  அடிப்படையாக கொண்டு ஒரு குறிப்பிட்ட topicஇல் நடக்கிறது.

உதாரணத்திற்கு,

  • baby shop near me
  • baby shop in chennai
  • buy baby dresses online
  •  which is latest design for baby girl

மக்கள் பெரும்பாலும் google ஐ தான் search Engine ஆக உபயோகப்படுத்துகிறார்கள்

google உங்களுக்கு பின்வரும் முடிவை தருகிறது.

 

இது தொழிலதிபர்களுக்கும் வெப்சைட்  சொந்தக்காரர்களுக்கும் ரொம்ப முக்கியம்

ஏன்  என்றால்?

அவர்கள் தேடப்பட்ட பிரச்சனைக்கு ஒரு தீர்வை வழங்கினால் …

அந்த தலைப்பில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கானோர் காணக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது.

மேலுள்ள உதாரணத்திலிருந்து ,

நீங்கள் தான் Firstcry வெப்சைட் உரிமையாளராக இருந்தால் நீங்கள் அதிக லாபங்களை ஈட்டலாம்.

 ஏன் முதலிடம் வேண்டும்?

நீங்கள் முதலிடத்தை பெறாவிட்டால் பெரும்பான்மையான லாபத்தை இழக்க நேரிடும்.

1st rank in google

உதாரணத்துக்கு

 baby dresses online shopping னு நீங்க google ல தேடும் பொது அந்த குறிப்பிட்ட தேடலுக்கு  மாதம் 1,300 தேடல்கள் உள்ளது.

அதில் முதல் இடத்தை ஷாப்பர்ஸ் ஸ்டாப் பிடித்து, அதனால் மாதம் அந்த வெப்சைட்டுக்கு  486 பேர் வருகிறார்கள்.

ஆனால் இரண்டம் இடம் பிடித்த firstcryகு மாதம் 289 பேர் மட்டுமே வருகிறார்கள். இதனால் அவர்களுடைய வியாபாரம் பாதியாக குறைகிறது.

முதலிடத்தை இழப்பதால் firstcry க்கு  வரவேண்டிய லாபமும்   பாதியாகக் குறைகிறது.

அதனால் அனைத்து தொழிலதிபர்களும் வெப்சைட்  உரிமையாளர்களும் முதலிடத்தை எட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்

ஏன் SEO உங்களுக்கு தேவை?

SEO உங்கள் வெப்சைட் டிராபிக்கை அதிகப்படுத்தும்.

இதனால் உங்கள் தொழில் தொடர்பான முக்கியமான பக்கங்களை, நீங்கள் google ல தேடும் போது சரியான சொற்றொடர்களில் உங்களிடம் வெப்சைட் முதலிடத்தை பெறுகிறது.

இது உங்கள் வலைத்தளத்தை பத்து, நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான புதிய மக்கள் (அல்லது வாடிக்கையாளர்கள்) ஒவ்வொரு நாளும் அம்பலப்படுத்தலாம்.

அதனால் SEO உங்கள் தொழிலையும்/ வெப்சைட்டையும் நன்கு வளர்ச்சி பெற ஒரு நல்ல வாய்ப்பு. இது உங்கள் வருமானத்தையும் பெருக்கும்.

SEO வேலை செய்வதில்லையா?

எல்லா மார்க்கெட்டிங் நடைமுறைகளையும் போல, ஒருமுறை முடிவுகளை பெறுவது சிரமமாகிவிட்டால், அது வேலை செய்வதில்லை என்று முடிவு செய்து விடுவார்கள்.

is SEO dead

மக்களுக்கு search Engines யும் வெப்சைட்க்கு visitorயும் தேவைப்படும் வரை SEO இவ்வுலகில் நீங்க இடம் பிடிக்கும்.

ஆனால், ஏன் மக்கள் SEO வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள் என்றால் அதற்கு இரண்டு முக்கிய விஷயம் உள்ளது.

முதலில்,

SEOவின் தேவைகள் அதிகமானதால், போட்டிகளும் அதிகமாகி விட்டது.

 இன்றய காலகட்டத்தில் எந்த ஒரு தொழிலையே அல்லது யோசனையையோ, உடனே உங்களால் ஒரு வெப்சைட் தொடங்கி ஆன்லைன்  செயல் படுத்தமுடியும்.

அப்படி இருக்கும் பொது நெறய பேர் ஒரே keywordக்கு முதல் இடத்தை பெற போட்டி போடுகிறார்கள்.

அப்படினா நெறய பேர் SEO செயல்முறைகளை பயன்படுத்தி முதல் இடத்தை பெற முயற்சி செய்கிறார்கள்.

இரண்டாவதாக,

SEO செயல்படும் விதம் நாள் தோறும் மாறி கொண்டே உள்ளது.

கூகிள் போன்ற search Engines , அவற்றின் algorithms தொடர்ந்து மாற்றுவதோடு, இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கும் தொடர்ந்து மாறி வருகிறது.

மக்களின் தேடும் விதம் மாறும் போது, உதாரணமாக voice search. நாம் SEOவை அணுகும் முறையும் முற்றிலும் மாறும்.

இந்த இரண்டு காரணங்களினால் மக்கள் கொஞ்சம் முயற்சித்துவிட்டு பயனளிக்காததால், சீ சீ இந்த பழம் புளிக்கும் என்கிற கதையாக, SEO வேலை செய்வது இல்லை என்று சொல்லி கொண்டுள்ளனர்.

SEOக்கு எவ்வளவு செலவாகும்?

SEOக்கு  நெறய பணம் செலவு செய்ய தேவை இல்லை.

மிகவும் அடிப்படை SEO  நுட்பங்களான  keyword research, link building மற்றும் website optimization போன்றவற்றை  இலவச SEO  கருவிகள் பயன்படுத்தி ஒரு பைசா கூட செலவு இல்லாமல் செய்ய முடியும்.

there are three kinds of seo

எனினும், சிறந்த ஆராய்ச்சி செய்ய (Keyword Research), முன்னேற்றத்தை அளவிட(Check Ranking) மற்றும் உங்கள் போட்டியாளர்களுக்கு  என்ன வேலை செய்கிறது  என்பதைத் திருடுவதற்கு உதவும் கருவியில் முதலீடு செய்வது நல்லது.

நானே சொந்தமா SEO செய்துக்கிறேனா, நீங்கள் பின்வரும் டூல்ஸ்  SEMRUSH மற்றும் Ahref  பயன்படுத்தி உங்கள்  முடிவுகளை வேகப்படுத்துங்கள்.

இல்லையென்றால், நீங்கள் ஒரு நிறுவனத்தை உங்களுக்காக வேலைக்கு அமர்த்தலாம்.

எங்கள் நிறுவனம் மாதம் Rs 20,000 லிருந்து 30,000 வரை உங்கள் நிறுவனத்தின் தேவைகளை பொறுத்து எங்கள் சேவைக்கு வாங்குகிறோம்.

SEO  முடிவுகளைப் பார்ப்பதற்கு  எவ்வளவு நாட்கள்  ஆகும்?

நீங்கள் பொதுவாக முதல் 4 வாரங்களில் SEO விலிருந்து முடிவுகளைப் எதிர் பார்க்கலாம்.

ஆனால் இந்த கேள்விக்கு சரியான அல்லது தவறான பதில்என்று எதுவும் இல்லை.

இருப்பினும், குறைந்தபட்சம், முதல் சில வாரங்களுக்குள் தரவரிசையில் முன்னேற்றத்தை  நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அப்படி இல்லையென்றால் – ஏதோ தவறாக இருக்கலாம்.

SEO  முடிவுகளைப் பார்ப்பதற்கு  எவ்வளவு நாட்கள்  ஆகும்?

நீங்கள் SEOலிருந்து  முடிவுகளை விரைவாக காண,தீர்மானிக்கும்  காரணிகள் நிறைய உள்ளன.

  1. நீங்கள் வரிசைப்படுத்த முயற்சிக்கும்  Keyword.
  2. உங்கள் தொழிலின் போட்டி தன்மை.
  3. உங்கள் siteடின்   வயது.
  4. உங்கள் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள்.
  5. நீங்கள் ரேங்க் செய்ய முயற்சிக்கும் Search Engine ( கூகிள்,யாஹூ,..)
  6. நீங்கள் ரேங்க் செய்ய முயற்சிக்கும் பகுதி மற்றும் இடம்.

இதனால் SEOவின் கடினத்துவம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு தேவைப்படும் நேரமும் மாறும்.

ஆனால் உங்களுடைய விருப்பம் Google முதல் பக்கமானால்,

அது நீண்ட நேரம் எடுக்கும்.

 

முடிவுரை

நாம் இப்பொழுது, SEO என்றால் என்ன? ஏன்அதற்கு கவனம் செலுத்த வேண்டும்! அதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை  தெரிந்து கொண்டோம்.

 மீண்டும்  ஒருமுறை

  1. SEO என்பது உங்கள் வெப்சைட்டை சரியான நபரால், ஒரு search Engine லில் பார்ப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பது.
  2. உங்கள் தொழிலில் புதிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும்,வாய்ப்புகளையும்  உருவாக்கி தருவதில் பெரும் பங்கு வகுக்கிறது.
  3. உங்கள் தொழிலை பற்றி தெரிந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும் போது உங்கள் வருவாயும் அதற்கு இணையாக அதிகரிக்கிறது.
  4. SEOஇன்றும்  வேலை செய்கிறது. வெற்றிகளை கொண்டுவர கூடிய தொழில். ஆனாலும் கொஞ்சம்  போட்டிகள் நிறைந்தது.
  5. SEOலிருந்து  முடிவுகளை விரைவாக காண,தீர்மானிக்கும்  காரணிகள் நிறைய உள்ளன.

நீங்கள் எந்த கேள்விகளையும்  கேட்கலாம். உங்கள் கேள்விகளை கமெண்ட் பகுதியில் தெரிய படுத்தவும்.

உங்கள் வலைத்தளத்திற்கு SEO சேவை தேவை என்றால் கேளே உள்ள பட்டன் அழுத்தி எங்களை தொடபு கொள்ளவும்.